/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்காய பயிருக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
/
வெங்காய பயிருக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 24, 2024 01:21 AM
வெங்காய பயிருக்கு காப்பீடு
விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல், அக். 24-
'ரபி சிறப்பு பருவத்தில், வெங்காய பயிருக்கு காப்பீடு செய்து, விவசாயிகள் பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்துார் பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ரபி சிறப்பு பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
சின்ன வெங்காய பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு, 2,075 ரூபாய் பிரீமியமாக, அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். காப்பீடு செய்ய, வரும், நவ., 30 கடைசி நாள். அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை ஆவணங்களாக வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி, பயிர் காப்பீடு செய்வது குறித்து விளக்கம் பெற்று, காப்பீடு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.