/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
/
இன்று கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 23, 2025 01:26 AM
குமாரபாளையம், 'குமாரபாளையம் நகரில், இன்று கல்விக்கடன் முகாம் நடக்க உள்ளது. அதில், மாணவர்கள் பங்கேற்கலாம்' என, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் கலெக்டர் உத்தரவுப்படி, கல்விக்கடன் வழங்கும் முகாம், குமாரபாளையம் நகராட்சியில் உள்ள நடராஜ திருமண மண்டபத்தில், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 1:00 மணி வரை நடக்கவுள்ளது. மாணவ, மாணவியர் பங்கேற்று, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து கல்விக்கடன் பெற்று, பயன்பெற அழைக்கிறோம். அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களை, இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.