/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி
/
கனரா வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு பேரணி
ADDED : அக் 31, 2025 12:43 AM
நாமக்கல் நாமக்கல் கனரா வங்கி சார்பில், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும் கனரா வங்கியின் பிராந்திய அலுவலகத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. மண்டல மேலாளர் லோகா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
பேரணியில் நேர்மையாக இருங்கள், ஊழலுக்கு அடிமையாகாதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள் லஞ்சம் கொடுக்காதீர்கள், ஊழல் மாசு போல் பரவி அழிவை ஏற்படுத்தும். ஊழல் நியாயமில்லை, ஊழலை ஒழிப்போம் நாட்டு நலனை காப்போம், துாய்மை இந்தியா, ஊழல் இல்லாத இந்தியா என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வங்கி ஊழியர்கள் சென்றனர்.திருச்செங்கோடு சாலையில் துவங்கிய பேரணி, சேலம் சாலைக்கு சென்று மீண்டும் வங்கியில் நிறைவடைந்தது.

