/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டையில் தேவர் ஜெயந்தி விழா
/
நாமகிரிப்பேட்டையில் தேவர் ஜெயந்தி விழா
ADDED : அக் 31, 2025 12:43 AM
நாமகிரிப்பேட்டை,  நாமகிரிப்பேட்டையில், அகமுடியர் நலச்சங்கம் சார்பில் தேவர் ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே தேர்முட்டி பகுதியில் உள்ள, முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள், பயணிகளுக்கு நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். முன்னதாக பட்டாசு  வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம், மோகனசுந்தரம், சுப்ரமணி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, கும்பக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளிலும் தேவர் ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்பகுதியில்  உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

