நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த குப்பநாயக்கனுாரில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவு மண்டல பூஜை நடந்து வருகிறது.
மண்டல பூஜையின் நிறைவு நாளான, நேற்று இரவு யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, குத்துவிளக்கு பூஜை நடந்தது.