நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், நவராத்திரி, 5ம் நாளான, நேற்று மாலை சேந்தமங்கலம் பிரதான சாலையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, பகவதி அம்மனுக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.