sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

/

கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


ADDED : நவ 03, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,: கல்லறை திருநாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள கிறிஸ்த-வர்கள், இறந்துபோன தங்களது உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில், நவ., 2ல், 'கல்லறை' திரு-நாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, பூக்கள், மாலைகளால் அலங்கரிக்கின்-றனர். தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இறந்த ஆத்-மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்த-னையில் ஈடுபடுவர்.

அதன்படி, நாமக்கல் அடுத்த மோகனுாரை சேர்ந்த கிறிஸ்த-வர்கள், காட்டுப்புத்துார் சாலையில் உள்ள ஆலய வளாக கல்ல-றையில், இறந்துபோன தங்களது உறவினர்களின் கல்லறைக்கு சென்று வழிபட்டனர். அதேபோல், ஆர்.சி., பேட்டப்

பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், இறந்தவர்களின் கல்ல-றையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். அதில், பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ தலை-மையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறைகளில், கிறிஸ்தவர்கள் 'இறந்துபோன தங்கள் உறவினர்கள் மோட்சம் அடைய வேண்டும்' என, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us