/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபட் மீது கார் மோதி மேஸ்திரி பரிதாப பலி
/
மொபட் மீது கார் மோதி மேஸ்திரி பரிதாப பலி
ADDED : டிச 23, 2024 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப,வேலுார்: நாமக்கல் அடுத்த, கீரம்பூர் ஆண்டிப்பட்டிபுதுாரை சேர்ந்தவர் ராஜி, 60, கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, சம்பளம் வாங்குவதற்காக தனது மொபட்டில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வள்ளிபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பூபதி அளித்த புகார்படி, நல்லிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

