/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது கார் மோதி விபத்து: டிரைவர் கைது
/
டூவீலர் மீது கார் மோதி விபத்து: டிரைவர் கைது
ADDED : ஆக 17, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், திருப்பூர் அருகே, பூலுவப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 56; கட்டட மேஸ்திரி. இவர், கடந்த, 8ல், சேலத்துக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து, மாலை, 5:40 மணிக்கு சொந்த ஊருக்கு டி.வி.எஸ்., ஜூப்பிடர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த, 'ரெனால்ட் டிரைபர்' கார், நாகராஜ் மீது மோதியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்துக்கு காரணமான கார் டிரைவரான, சேலம் கவுதமன், 24, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.