/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி
/
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி லோடு மேன் பலி
ADDED : மே 15, 2024 11:07 AM
மோகனுார்: நாமக்கல் அடுத்த மரூர்பட்டி பஞ்.,க்குட்பட்ட கரட்டுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா, 30. இவர், செல்லிபாளையம் பகுதியில் உள்ள ஆசிட் நிறுவனத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, மோகனுாரில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தன், 'ஹீரோ டீலக்ஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அணியாபுரம் அடுத்த பரளி பிரிவு சாலை அருகே சென்றபோது, மோகனுாரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

