/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு
/
மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மனைவி மல்லிகா, 38; இவர், குடும்ப செலவிற்காக மைக்ரோ பைனான்சில், 40,000 ரூபாய் கடன் பெற்றார். பாதி தொகையை தவணை முறையில் கட்டிய நிலையில், மீதி தொகையை குடும்ப சூழல் காரணமாக கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால், தனியார் மைக்ரோ பைனான்சில் பணிபுரியும் தமிழரசன், சீனிவாசன் ஆகியோர், இரவு நேரத்தில் மல்லிகா வீட்டிற்கு வந்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார், தனியார் மைக்ரோ பைனான்ஸ் பணியாளர் மீது வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.