/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'த.வெ.க., மீது மட்டும் தான் பேனர் வைத்ததற்காக வழக்கு'
/
'த.வெ.க., மீது மட்டும் தான் பேனர் வைத்ததற்காக வழக்கு'
'த.வெ.க., மீது மட்டும் தான் பேனர் வைத்ததற்காக வழக்கு'
'த.வெ.க., மீது மட்டும் தான் பேனர் வைத்ததற்காக வழக்கு'
ADDED : செப் 27, 2025 01:46 AM
நாமக்கல் ''பேனர் வைத்ததற்காக வழக்குபோட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட ஒரே கட்சி, த.வெ.க., தான்,'' என, இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
நாமக்கல், கரூரில் நாளை(இன்று), த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆனால், த.வெ.க.,விற்கு மட்டும் தான் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. காவல் துறையினரும், அதிகாரிகளும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் சொல்கிறது. பேனர் வைத்ததற்காக, த.வெ.க., மீது மட்டும் தான் வழக்கு போடப்படுகிறது. கட்சி நிர்வாகியும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த சவால்கள் எங்களுக்கு மட்டும் தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, 'சனிக்கிழமை மட்டும் வரும் நபர் நானில்லை' என துணை முதல்வர் உதயநிதி விமர்சித்துள்ளாரே என்ற நிருபரின் கேள்விக்கு, ''முதலில் அவர் துாங்கி எழுந்திருக்கட்டும். அவர் நேரத்திற்கு வரட்டும். முதலில் அவர் வகிக்கும் துறையை சொல்லட்டும். துறையை பற்றி தெரிந்து கொள்ளட்டும்,'' என்றார்.