/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் பிரச்னையில் மூவர் மீது வழக்கு பதிவு
/
கோவில் பிரச்னையில் மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 08, 2024 01:26 AM
கோவில் பிரச்னையில்
மூவர் மீது வழக்கு பதிவு
வெண்ணந்துார், நவ. 8-
வெண்ணந்துார் ஒன்றியம், ஆலாம்பட்டி பஞ்.,ல், மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2018ல், இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, மாரியம்மன் கோவில் வருவாய்த்துறை சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் கடந்த, 1 ம் தேதி சீல் வைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பூட்டை சுத்தியால் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு தரப்பினர் புகார் மனு கொடுத்தனர். புகார்படி அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, 45, தங்கவேல் மகன் ரஞ்சித் குமார், 25, வாசுதேவன், 48, என மூன்று பேர் மீது, மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.