/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணம் ரூ.43 லட்சம் மோசடி: கேஷியர் கைது
/
தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணம் ரூ.43 லட்சம் மோசடி: கேஷியர் கைது
தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணம் ரூ.43 லட்சம் மோசடி: கேஷியர் கைது
தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் பணம் ரூ.43 லட்சம் மோசடி: கேஷியர் கைது
ADDED : நவ 22, 2025 02:27 AM
நாமக்கல், நாமக்கல் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் பணம், 43.05 லட்சம் ரூபாயை மோசடி செய்து, மும்பையில் பதுங்கியிருந்த கேசியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்-பரமத்தி சாலையில், பஜாஜ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் துணை மேலாளராக, சுரேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த, 11ல், நாமக்கல் போலீசில் புகார் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச், 27ல், நாமக்கல் கிளையில் தனிநபர் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்களில், தவணை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் தவணையை முழுமையாக செலுத்தி, அதற்கான ரசீது பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது, நாமக்கல் கிளைக்கு நேரில் வந்து கேஷியர் சீனிவாசன், 40, என்பவரிடம், தவணை தொகை செலுத்தியதும், அதை சீனிவாசன், நிறுவன கணக்கில் வரவு வைக்காமல், 38 பேரிடம், 43 லட்சத்து, 5,333 ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.
அவரை பிடித்து கேட்டபோது, 38 கடன் கணக்குகளின் தொகையில், 6 கடன் கணக்கு தொகையான, 80,919 ரூபாயை செலுத்தினார். மீதமுள்ள, 32 கடன் கணக்குகளின் தொகையான, 42 லட்சத்து, 24,414 -ரூபாயை, மார்ச், 31க்குள் செலுத்திவிடுவதாக எழுதிக்கொடுத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து, மோசடி பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து, இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில், தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், மும்பையில் பதுங்கி இருந்த சீனிவாசனை கைது செய்தபோலீசார், நேற்று காலை, 8:30 மணிக்கு, நாமக்கல் அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

