ADDED : அக் 26, 2025 12:25 AM
ப.வேலுார், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம், ஜவ்வரிசி ஆலைக்கு செல்லும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று, 6,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை குறைந்து, 5,500 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று, 9,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை குறைந்து, 8,500 ரூபாய்க்கு விற்றது.

