ADDED : ஏப் 15, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி :குட்டையில் மீன் பிடித்தபோது, மாட்டு வியாபாரி தவறி விழுந்து உயிரிழந்தார்.
எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா, 38; மாட்டு வியாபாரி. இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
