/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நாமக்கல் வருகை
/
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நாமக்கல் வருகை
ADDED : ஏப் 01, 2024 03:55 AM
நாமக்கல்: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பெங்களூருவில் இருந்து, இரண்டு கம்பெனி மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த, 180 பேர் நாமக்கல் வந்தனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 42 குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது.
இதில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக பெங்களூருவில் இருந்து, மத்திய பாதுகாப்பு படையின் இரண்டு கம்பெனி வீரர்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு கம்பெனிக்கு, 90 பேர் வீதம், 180 பேர் நாமக்கலுக்கு நேற்று அதிகாலை ரயிலில் வந்தனர். இந்த கம்பெனியில் தலா ஒரு டி.எஸ்.பி., தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

