/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு 15 பேருக்கு உத்தரவு வழங்கிய சி.இ.ஓ.,
/
தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு 15 பேருக்கு உத்தரவு வழங்கிய சி.இ.ஓ.,
தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு 15 பேருக்கு உத்தரவு வழங்கிய சி.இ.ஓ.,
தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு 15 பேருக்கு உத்தரவு வழங்கிய சி.இ.ஓ.,
ADDED : ஜூலை 02, 2025 02:31 AM
நாமக்கல், நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 17 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், 16 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. 29 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும், 18 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் நடந்த கலந்தாய்வில், 6 மேல்நிலைப்பள்ளி, 9 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர். அதில் பாச்சல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன், அத்தனுாருக்கும், வெப்படை மணிகண்டன், பாச்சலுக்கும், சேந்தமங்கலம் சுமதி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறுதல் பெற்றனர்.
பரமத்தி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நீதிராஜன், மோகனுார் அரசு ஆண்கள் பள்ளிக்கும், தண்ணீர்பந்தல்பாளையம் முத்துநல்லியப்பன், நாமகிரிப்பேட்டை ஆண்கள் பள்ளிக்கும் மாறுதல் பெற்றனர்.
அதேபோல், வாழவந்தி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார், தத்தாத்திரிபுரத்திற்கும், குப்புச்சிப்பாளையம் தங்கராஜ், வாழவந்திக்கும், குமாரபாளையம் வேல்முருகன், கூனவேலம்பட்டிபுதுாருக்கும் பணிமாறுதல் பெற்றனர்.
ஆர்.புதுப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அர்த்தனாரி, குமாரபாளையத்திற்கும், கீரம்பூர் சசிகலா, சின்ன முதலைப்பட்டிக்கும், புதுப்பாளையம் மணிமலர், கீரம்பூருக்கும் இடமாறுதல் பெற்றனர்.
மேலும், அருவங்காடு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகசுந்தரி, கோட்டப்பாளையம், வேமன்காட்டு வலசு செல்வி, அருவங்காடு, நஞ்சப்பக்கவுண்டம்பாளையம் தலைமையாசிரியர் திருநாவுக்கரசு, வில்லிபாளையத்திற்கு இடமாறுதல் பெற்றனர்.
பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அதற்கான உத்தரவு வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.