/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
/
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ADDED : செப் 30, 2025 01:26 AM
ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டை, ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு, நவராத்திரி விழாவையொட்டி சண்டியாகம் நடத்தப்படுவது வழக்கம். உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், நடப்பாண்டு சண்டி
யாகம், நேற்று நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு தொடங்கிய சண்டி
யாகம், மதியம், 12:00 மணி வரை நடந்தது. தொடர்ந்து, ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான
பக்தர்கள் கலந்துகொண்டனர்.