ADDED : ஏப் 18, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்,நாமக்கல் நகராட்சி, 2024 ஆக.,ல் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஆக., 14ல் மாநகராட்சியின் முதல் கமிஷனராக மகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, செப்., 16ல் மாநகராட்சியின் முதல் மேயராக கலாநிதி பொறுப்பேற்றார். இந்நிலையில், நேற்று தமிழகரசு, 13 மாநகராட்சி கமிஷனர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதில், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனராகவும்; மதுரை மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், நாமக்கல் மாநகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.