/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூடுதல் கட்டணம் வசூலிப்பா? ஆம்னி பஸ்களில் ஆய்வு
/
கூடுதல் கட்டணம் வசூலிப்பா? ஆம்னி பஸ்களில் ஆய்வு
ADDED : ஏப் 19, 2024 06:46 AM
நாமக்கல் : ஆம்னி பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, நாமக்கல் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பஸ்கள் கடந்த, மூன்று நாட்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து ஆணையர் அனைத்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், குமாரபாளையம் ஆர்.டி.ஓ., பூங்குழலி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சிவக்குமார் ஆகியோர் கீரம்பூர் சுங்கச்சாவடி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் கடந்த, இரு நாட்களாக ஈடுபட்டனர். இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட, 10 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.மேலும் குமாரபாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 2 ஆம்னி பஸ்களுக்கு தலா, 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஸ்களின் உரிமையாளர்கள், ஆன்லைன் மூலம் அபராத தொகையை செலுத்தியதால், 2 பஸ்களும் பயணிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

