sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடிகாலில் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர்

/

வடிகாலில் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர்

வடிகாலில் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர்

வடிகாலில் ரசாயன நெடியுடன் சாயக்கழிவுநீர்


ADDED : டிச 28, 2025 07:28 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: ஒட்டமெத்தை பகுதியில் செல்லும் வடிகாலில், இரவு நேரத்தில் ரசாயனம் கலந்த நெடியுடன் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் செயல்-படும் சாய ஆலைகள், விதிமீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மாச-டைந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும்-போது புற்றுநோய், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட பல்-வேறு வகையான உடல்பாதிப்புகள் ஏற்படுகின்-றன.பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் சென்றால் மட்டும், விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது, குமாரபாளையம் மாசுகட்டுப்-பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்-றனர். இல்லையெனில் அலட்சியமாக உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில், ஒட்-டமெத்தை பகுதியில் செல்லும் வடிகாலில் ரசா-யனம் கலந்த நெடியுடன் சாயக்கழிவுநீர் சென்-றது. இந்த சாயக்கழிவுநீர், ஒன்பதாம்படி பகுதி வழியாக வந்து நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இரவில் வடிகாலில் நெடியுடன் சாயக்கழிவுநீர் வருவததை, சிலர் வீடியோ எடுத்-துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலை மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.






      Dinamalar
      Follow us