/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தபோது வீடு சேதமானதாக அப்பகுதி மக்கள் புகார்
/
பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தபோது வீடு சேதமானதாக அப்பகுதி மக்கள் புகார்
பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தபோது வீடு சேதமானதாக அப்பகுதி மக்கள் புகார்
பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தபோது வீடு சேதமானதாக அப்பகுதி மக்கள் புகார்
ADDED : டிச 28, 2025 07:27 AM
திருச்செங்கோடு: காஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்க பாறைக-ளுக்கு வெடி வைத்து தகர்த்தபோது, குடியிருப்-புகள் மீது கற்கள் விழுந்து வீடுகள் சேதமானதாக, அப்பகுதி மக்கள் போலீசில் புகாரளித்தனர்.
திருச்செங்கோடு-சேலம் மெயின் ரோட்டில், கூத்-தாநத்தம் ஊராட்சி, அனுமன் கோவில் அருகே, நேற்று முன்தினம், காஸ் பைப் லைன் கட்டுப்-பாட்டு அறை அமைக்க, பாறைகளுக்கு வெடி-வைத்து தகர்க்கப்பட்டது. அப்போது, வீட்டு மேற்-கூரை மீது கற்கள் பறந்து வந்து விழுந்ததில், வீடுகள் சேதமானதாக அப்பகுதி மக்கள், மல்லச-முத்திரம் போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து, கூத்தாநத்தம் ஊராட்சியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் சேதமான வீட்டின் உரிமையாளர் பொன்-னம்மாள் ஆகியோர் கூறியதாவது:
கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். தற்போது, காஸ் குடோன் மற்றும் கட்டுப்பாட்டு அறை வருவதாக கூறுகின்றனர். இதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்த்துள்-ளனர். அதில், வெடித்து சிதறிய கற்கள், எங்கள் வீட்டின் மீது ஓடுகள் உடைந்தன. இதில், தொட்-டிலில் துாங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அருகில் கல் விழுந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரு நாள் கட்டுமான பணிக்கே, எங்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்-ளது. காஸ் கட்டுப்பாட்டு அறை வந்தால், எவ்வ-ளவு பாதிப்போடு நாங்கள் வாழ வேண்டும் என்-பதை உணர்ந்து, கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

