/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.10 கோடியில் 5 நுாலகங்கள் முதல்வர் காணொலியில் திறப்பு
/
ரூ.1.10 கோடியில் 5 நுாலகங்கள் முதல்வர் காணொலியில் திறப்பு
ரூ.1.10 கோடியில் 5 நுாலகங்கள் முதல்வர் காணொலியில் திறப்பு
ரூ.1.10 கோடியில் 5 நுாலகங்கள் முதல்வர் காணொலியில் திறப்பு
ADDED : செப் 27, 2025 01:20 AM
நாமக்கல், தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில், காணொலி காட்சி மூலம், பொது நுாலக இயக்ககம் சார்பில், 39.33 கோடி ரூபாய் மதிப்பில், 146 நுாலக கட்டடங்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன்படி, நாமக்கல் மாநகராட்சி அழகுநர், வெண்ணந்துார் டவுன் பஞ்., எருமப்பட்டி ஒன்றியம், வரகூர் பஞ்., பள்ளிப்பாளையம் ஒன்றியம் கொக்கராயன்பேட்டை பஞ்., எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி பஞ்., மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில், 5 நுாலகங்கள் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி அழகுநகரில் திறந்து வைக்கப்பட்ட நுாலகத்தை, வாசிப்பாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார் பார்வையிட்டு, வாசிப்பாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், மாவட்ட நுாலக அலுவலர் (பொ) தேன்மொழி, கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.