/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 13ல் 60 கிராம பஞ்சாயத்தில் தொடக்கம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 13ல் 60 கிராம பஞ்சாயத்தில் தொடக்கம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 13ல் 60 கிராம பஞ்சாயத்தில் தொடக்கம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 13ல் 60 கிராம பஞ்சாயத்தில் தொடக்கம்
ADDED : பிப் 03, 2025 08:38 AM
நாமக்கல்: 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூன்றாம் கட்டம், வரும், 13ல், 60 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்குகிறது' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிரா-விடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மூன்றாம் கட்டமாக, கிராம பஞ்சா-யத்துகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின், 3ம் கட்ட சிறப்பு முகாம் நடப்பது தொடர்பாக, முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதா-வது:தமிழகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு, 2023 டிச., 18ல், கோவையிலும், 2024 ஜூலை, 11ல், 'ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர்' திட்டம், தர்மபுரியிலும், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்ட-மாக, 2023 டிச., 18 முதல், டிச., 29 வரை, 5 நக-ராட்சிகள், 18 டவுன் பஞ்சாயத்துகளிலும், இரண்டாம் கட்டமாக, 2024 ஜூலை, 11 முதல் ஆக., 27 வரை, 15 ஒன்றியங்களுக்குட்பட்ட, 322 கிராம பஞ்சாயத்துகளிலும் நடந்தது.
தற்போது, மூன்றாம் கட்டமாக, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 60 கிராம பஞ்சா-யத்துகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், வரும், 13 முதல், மார்ச், 7 வரை நடக்கி-றது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, ஒரு மாத காலத்தில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு செயல்-படுத்தப்படுகிறது. அதில், பல்வேறு துறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் பெறப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.டி.ஓ., பார்த்திபன், பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.