/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் பேச்சு: திரையில் ஒளிபரப்பு
/
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் பேச்சு: திரையில் ஒளிபரப்பு
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் பேச்சு: திரையில் ஒளிபரப்பு
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் பேச்சு: திரையில் ஒளிபரப்பு
ADDED : செப் 06, 2025 01:48 AM
நாமக்கல் :தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றார். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்தவர், தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்றார்.
அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடந்த, 'சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள்' மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையின் தொகுப்பு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், டிஜிட்டல் திரையில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர், முதல்வர் ஸ்டாலின் பேசிய, 23 நிமிட உரையை கட்சியினருடன் அமர்ந்து பார்த்தனர். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் மாயவன், கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.