/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
/
நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
ADDED : அக் 04, 2024 03:15 AM
நாமக்கல்: முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் வருகையையொட்டி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், ரூ.100 கோடி மதிப்பிலான நவீன ஆவின் பால் பண்ணை அடிக்கல் நாட்டு விழா, புதிய பஸ் ஸ்டாண்டு தொடக்க விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலை திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவை அக்.,15ம் தேதி நடைபெற உள்ளதாகவும், நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், விழா நடைபெறும் இடத்தை நேற்று முன்தினம் எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.
இந்திலையில், நாமக்கல் கோட்டை சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் பகுதியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் கொண்டு அகற்றி வருகின்றனர். முதல்வர் வந்து செல்லும் வரை, அந்த பகுதிகளில் சாலையோர கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.