/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு போக்சோ
/
சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு போக்சோ
ADDED : மே 23, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி தேவேந்திர தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், 50, கூலித்தொழிலாளி. இவர் இதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளிர் போலீசார் பழனியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்ததுடன், கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.