/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 20, 2024 01:38 AM
குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி
நாமக்கல், நவ. 20-
உலக குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி முன் துவங்கிய பேரணி, டவுன் பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, ஸ்டேட் பாங்க் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது.
பேரணியில், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுய உதவிக்குழு உறுப்பினர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் என மொத்தம், 400-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, 3 கி.மீ., தொலைவிற்கு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட இடை நிலை கல்வி அலுவலர் கற்பகம், கல்லுாரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர், போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.