/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஏப் 19, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:
எருமப்பட்டி டவுன் பஞ்., அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் நாகேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், டவுன் பஞ்., பகுதிகளில் பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்; இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கவிதா, துணைத்தலைவர் ரவி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அன்பரசி, இளநிலை உதவியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.