/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லறைகள் இடிப்பு கிறிஸ்தவர்கள் கண்டனம்
/
கல்லறைகள் இடிப்பு கிறிஸ்தவர்கள் கண்டனம்
ADDED : மே 18, 2025 05:18 AM
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை பஞ்.,க்குட்பட்ட மயானம், சேலம்-கோவை பைபாஸ் சாலை அருகே உள்ளது.
இந்த இடத்தில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பூச்செடி, மரக்கன்று வைப்பதற்காக, பஞ்., நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மயானம் முழுவதும் உள்ள கல்லறைகளை பொக்லைன் இயந்-திரம் கொண்டு இடிக்கும் பணி நடந்தது. மேலும், குளத்துக்காடு பகுதியில் உள்ள தட்டான்குட்டை பஞ்.,க்குட்பட்ட மயா-னத்தில், பஞ்., சார்பில் கல்லறைகள் மீது குப்பையை மலைபோல் கொட்டி குவித்து வைத்திருந்தனர். இதற்கு கண்-டனம் தெரிவித்த, நடராஜா நகர், ஜெபமாலை மாதா பேராலய பங்கு தந்தை பெலவேந்திரம், செயலாளர் இன்னாசிமுத்து, பொருளாளர் வின்சென்ட், கல்லறை பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோர், குமாரபாளையம் போலீசில் புகார் மனு அளித்தனர். மேலும், சம்பவ இடத்தில் கிறிஸ்தவ மக்கள் திரண்டனர். இதை-யடுத்து அங்கு சென்ற போலீசார், கல்லறை இடிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என, தெரிவித்ததை அடுத்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.இதேபோல், குளத்துக்காடு பகுதியில் உள்ள மயானத்தில் குப்பை கொட்டக்கூடாது என, பஞ்., நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்-டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.