/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்
/
நாமக்கல்லில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்
ADDED : டிச 26, 2025 05:29 AM

நாமக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகை, நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயம் மற்றும் அசெம்பிளி ஆப் காட் சபையில், சிறப்பு பிரார்த்தனை-யுடன் கோலாகலமாக கொண்டாப்பட்டது.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவால-யத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சிறப்பு திரு-ப்பலி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பங்கு-தந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அதேபோல், நாமக்கல்-சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்-பிளி ஆப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தலைமை போதகர் நாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை-யுடன் துவங்கியது. தொடர்ந்து ஏசு பிறப்பு குறித்து சிறுவர், சிறு-மியர் நாடகம் நடத்தப்பட்டது. சிறப்பு ஆராதனையில் ஏராள-மான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* மோகனுார் சீத்தப்பட்டி அருகில் உள்ள, ஐ.பி.சி., ஆசீர்வாத திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பாஸ்டர் நேசக்கு-மாரன் தலைமை வகித்தார். நாமக்கல்
எம்.பி. மாதேஸ்வரன் விழாவில் கலந்துகொண்டு, கேக் வழங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, பயனாளிக-ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், கொ.ம.தே.க., பொருளாளர் சசிகுமார், தெற்கு மாவட்ட தலைவர் பழனிமலை, வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ, மாவட்ட மகளிரணி செயலாளர் பிரேமலதா, ஒருங்கி-ணைந்த மோகனுார் ஒன்றிய மகளிரணி செயலாளர் சுதா, ஒன்றிய செயலாளர்
நவலடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* சின்னஎலச்சிபாளையத்தில் உள்ள, புனித அந்தோணியர் ஆல-யத்தில், கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்-டது. அருட்தந்தை அருள்வளவன் திருப்பலி நிறைவேற்றினார்.
* ராசிபுரம், துாய லுார்து அன்னை ஆலயத்தில் கூடிய கிறிஸ்த-வர்கள், அருகில் உள்ள நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் வி.நகர் அருகில் உள்ள தேவாலயம் மற்றும் காக்காவேரி தேவால-யத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* குமாரபாளையம் நடராஜா நகர் தேவாலயம், வேதாந்தபுரம், சடையம்பாளையம், அருவங்காடு தேவாலயங்களில் நள்ளிரவு பூஜை, காலை பூஜை ஆகியவை நடந்தது. கிறிஸ்தவர்கள் ஒருவ-ருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

