/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்தர் குகை அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம்
/
சித்தர் குகை அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம்
ADDED : செப் 03, 2025 12:49 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், வியாழன் தோறும் குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், இந்த குகை அருகே இரவில், 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே, இந்த இடத்தில், 'குடி'மகன்கள் மது அருந்தாதபடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.