ADDED : நவ 13, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் வேலுசாமி பேசுகையில், ''எலச்சிபாளையம் அடுத்த மொஞ்சனுாரில், அசாம் மாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்த சிறார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

