ADDED : ஏப் 23, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்,:நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், நாமக்கல் மாவட்டத்தில், 300 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர், துாய்மை காவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், சுகாதார ஊக்குனர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஊராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
******************