/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வகுப்பறை கட்டுமானம்: விரைந்து முடிக்க அறிவுரை
/
வகுப்பறை கட்டுமானம்: விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : டிச 14, 2024 01:03 AM
மோகனுார், டிச. 14-
மோகனுார், என்.புதுப்பட்டி பஞ்.,க்குட்பட்ட ராமுடையானுார் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டப்பட்டு வருகிறது. அவற்றை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, கட்டடத்தின் அமைப்பு, வழித்தடம், சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைவிடம், பணி முடியும் காலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, 'கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மணப்பள்ளி பஞ்சாயத்தில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் தினசரி குடிநீரின் விபரம் குறித்து கேட்டறிந்தார்.

