/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
/
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
ADDED : டிச 09, 2024 07:11 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, கடந்த வாரம் வங்க கடலில் உருவான, 'பெஞ்சல்' புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால், அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், மரங்கள், பாறைகள் தண்ணீரில் அடித்து வந்ததுடன், மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் செந்நிறத்தில் கொட்டியது. இதனால், அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், மாசிலா அருவி, நம்மருவியில் தண்ணீர் குறைந்ததால், கடந்த, 7 முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல், அருவியில் கொட்டும் தண்ணீர் வழக்கமான வெண்மை நிறத்திற்கு மாறியது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. முன்னதாக, அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கிடந்த பாறை, மண் உள்ளிட்டவை அகற்றி சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்தது.