ADDED : செப் 17, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று 'துாய்மையே சேவை' திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாம் துாய்மையாக இருப்பது எப்படி, நம்மை சுற்றியுள்ள இடத்தை எப்படி துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபு விளக்கினார். தொடர்ந்து, நகர் சார்ந்த பகுதிகளையும், பொது இடங்களையும் துாய்மையாக வைத்துக்கொள்வது குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
நகராட்சி பொறியாளர் சரவணன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.