/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சியின் துாய்மையே சேவை நாமக்கல்லில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மாநகராட்சியின் துாய்மையே சேவை நாமக்கல்லில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாநகராட்சியின் துாய்மையே சேவை நாமக்கல்லில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாநகராட்சியின் துாய்மையே சேவை நாமக்கல்லில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 20, 2024 01:43 AM
நாமக்கல், செப். 20-
நாமக்கல் மாநகராட்சி சார்பில், துாய்மையே சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துாய்மை இந்தியா திட்டம் மூலம், நாமக்கல் மாநகராட்சி சார்பில், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில், 'துாய்மையே சேவை' என்பது குறித்த விழிப்புணர்வு நிழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பாளராக மேயர் கலாநிதி பங்கேற்று, 'துாய்மையும் வளர்ச்சியும் இருக்க வேண்டும்' என உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்று கொண்டனர்.
தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். துாய்மை குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். பேரணி திருச்சி சாலை, மணிக்கூண்டு, பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்று, மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தது.