/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை வனப்பகுதியில் நகர்ந்து சென்ற மேக கூட்டம்
/
கொல்லிமலை வனப்பகுதியில் நகர்ந்து சென்ற மேக கூட்டம்
கொல்லிமலை வனப்பகுதியில் நகர்ந்து சென்ற மேக கூட்டம்
கொல்லிமலை வனப்பகுதியில் நகர்ந்து சென்ற மேக கூட்டம்
ADDED : மே 24, 2024 06:55 AM
சேந்தமங்கலம் : கொல்லிமலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்த நிலையில், நேற்று வனப்பகுதியில் மேக கூட்டம் நகர்ந்து சென்றது.
தமிழகத்தில் எப்போது இல்லாத அளவு இந்தாண்டு வெயில், 104 டிகிரியை தாண்டி வாட்டி வந்தது. பொது மக்கள் அவதிப்பட்ட நிலையில், வெயில் காரணமாக கொல்லிமலையில் இருந்த மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்தது. 400 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் தீப்பிடித்து எரிந்து வீணானது. கொல்லிமலையில் பாறைகள் மட்டும் தெரிந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொல்லிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், மலையில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலை பகுதியில் வரும் நாட்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் வெண் பனிபோல் மேக கூட்டம் உருவாகி மலையை நோக்கி நகர்ந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.