/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15ல் முதல்வர் ஸ்டாலின் வருகை இன்று தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
15ல் முதல்வர் ஸ்டாலின் வருகை இன்று தி.மு.க., செயற்குழு கூட்டம்
15ல் முதல்வர் ஸ்டாலின் வருகை இன்று தி.மு.க., செயற்குழு கூட்டம்
15ல் முதல்வர் ஸ்டாலின் வருகை இன்று தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : அக் 07, 2024 03:49 AM
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் இன்று மாலை, 5:00 மணிக்கு, மோகனுார் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
வரும், 15ல் நாமக்கல் மாநகரில் பரமத்தி சாலை செலம்பக-வுண்டர் பூங்கா பகுதியில் அமைந்துள்ள, முன்னாள் முதல்வர் கரு-ணாநிதி முழு உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான
ஸ்டாலின் விழாவில் கலந்-துகொண்டு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.தொடர்ந்து, நாமக்கல் - சேலம் சாலை, பொம்மக்குட்டை-மேட்டில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு, 20,000 பய-னாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா ஏற்பாடுகள் மற்றும் முதல்வருக்கு
சிறப்பான வரவேற்பு அளிப்ப-தற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கழக நிர்வா-கிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சார்பு அணியினர் உள்ளிட்டோர் தவ-றாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.