/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் ரூ.72,000க்கு தேங்காய் ஏலம்
/
தேசிய வேளாண் சந்தையில் ரூ.72,000க்கு தேங்காய் ஏலம்
தேசிய வேளாண் சந்தையில் ரூ.72,000க்கு தேங்காய் ஏலம்
தேசிய வேளாண் சந்தையில் ரூ.72,000க்கு தேங்காய் ஏலம்
ADDED : டிச 11, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய வேளாண் சந்தையில்
ரூ.72,000க்கு தேங்காய் ஏலம்
ப.வேலுார், டிச. 11--
ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்ட மங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 4,350 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சம் கிலோ, 56.10 ரூபாய், குறைந்தபட்சம், 27.29 ரூபாய், சராசரி, 38.20 ரூபாய் என, மொத்தம், 72,000 ரூபாய்க்கு வர்த்தகமானது