/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கியின் முத்திரை, விண்ணப்பம் பயன்படுத்தி பணம் வசூல்: 2 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

ADDED : நவ 13, 2024 07:29 AM
ப.வேலுார்: வங்கியின் போலி முத்திரை, சேமிப்பு கணக்கு விண்ணப்பம் பயன்படுத்தி, கிராம மக்களிடம் பணம் வசூல் செய்த, இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 36. சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் பிச்சைமுத்து, 26, ஆகிய இருவரும், நேற்று காலை, 10:00 மணிக்கு, ப.வேலுார் அடுத்த சுள்ளிபாளையம் கிராம மக்களிடம், 'நாங்கள் யுகோ வங்கியில்' பணியாற்றுகிறோம். வங்கியில் கணக்கு துவங்குவதற்கு, 1,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, வங்கியில் லோன் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து பலரிடம் பணம் பெற்று ஆவணங்களை பூர்த்தி செய்தனர். அதில் சந்தேகமடைந்தவர்கள், இதுகுறித்து, யுகோ வங்கி நல்லிபாளையம் கிளையில் பணியாற்றும் முதுநிலை மேலாளர் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்றபோது, இரண்டு வாலிபர்களும், யுகோ வங்கியின் போலியான சேமிப்பு கணக்கு விண்ணப்பம், போலி முத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்கள் உதவியுடன், இரண்டு நபர்களையும் பிடித்து ப.வேலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சுள்ளிபாளையம், மீனாட்சிபாளையம், கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் போலி ஆவணம் மூலம், பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கு துவங்குவதற்கு பணம் வசூல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, ப.வேலுார் போலீசார், இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.