/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பணி கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

ADDED : நவ 23, 2025 01:03 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நேற்று துவங்கி, இன்று வரை, இரண்டு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
தொடர்ந்து, முகாமில் பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில், சட்டக்கல்லுாரி மாணவியர் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு பெறப்பட்ட மனுக்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணியையும் பார்வையிட்டார்.
இதேபோல், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை சம்பந்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.