/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமலை பெருமாள் கோவிலில் விளக்கு நாச்சியார் சிலை மாயம்
/
தலைமலை பெருமாள் கோவிலில் விளக்கு நாச்சியார் சிலை மாயம்
தலைமலை பெருமாள் கோவிலில் விளக்கு நாச்சியார் சிலை மாயம்
தலைமலை பெருமாள் கோவிலில் விளக்கு நாச்சியார் சிலை மாயம்
ADDED : நவ 23, 2025 01:03 AM
நாமக்கல், மோகனுார், வடவத்துார் தலைமலையில், வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், விளக்கு நாச்சியார் (பாவை விளக்கு) என்று அழைக்கப்பட்ட விலை மதிப்பற்ற பழங்கால ஐம்பொன்னாலான சிலை இருந்தது. இந்த சிலை மாயமானது என, கோவிலின் குடிப்பாட்டுக்காரரான எருமப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகாரளித்தார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்மங்கி, எஸ்.ஐ., ரேவதி ஆகியோர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில், செல்வகுமார் மற்றும் கோவில் பக்தர்களிடம், இரண்டு மணி நேரம் நேற்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, செல்வகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ''தற்போது கோவிலில் உள்ள விளக்கு நாச்சியார் சிலை, பழமையான சிலை என தொல்லியல்துறை மூலம் அறிவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், நாங்கள் வழிபட்ட சிலை இது இல்லை என்றும், அந்த சிலை ஆண்டாள் கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளோம். மேலும், அச்சிலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.

