/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் ஆபீசில் குறைதீர் கூட்டம்; 3 குழுவுக்கு ரூ.29.50 லட்சம் கடன்

ADDED : செப் 17, 2024 07:38 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 314 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், கூட்டுறவுத்துறை சார்பில், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சேமிப்பு கடனாக, 29.50 லட்சம் ரூபாய் கடனுதவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில், கல்வி உதவித்தொகையாக, ஒற்றை பெற்றோர் கொண்ட கல்லுாரி மாணவி தீபிகாவிற்கு, 30,000 ரூபாய், மாணவன் பிரதீஷ் கண்ணாவிற்கு, 40,000 ரூபாய் கல்லுாரி கட்டணம் செலுத்த உதவித்தொகை வழங்கினார்.
ஆண்டுதோறும் செப்., 17ல், 'சமூக நீதி' நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், அனை த்து துறை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.