/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டெங்கு பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
/
டெங்கு பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 06, 2024 03:19 AM
நாமகிரிப்பேட்டை: டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை, கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி அடுத்த கண-வாய்பட்டி பகுதியில் ஒருவர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று கார்கூடல்பட்டி வந்த கலெக்டர் உமா, கணவாய்பட்டி பகுதியில் டெங்குக்கு சிகிச்சை பெற்றுவரும் நபர் வசித்த பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் அப்ப-குதி மக்களிடம், கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது, வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உரல், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் மழை நீர் மற்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், சக மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.