/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பணியாளர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
/
அரசு பணியாளர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
அரசு பணியாளர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
அரசு பணியாளர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
ADDED : அக் 19, 2024 01:05 AM
அரசு பணியாளர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல், அக். 19-
'அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலும், மிரட்டினாலும் கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வர்
உத்தரவின்படி, அரசின் திட்டங்கள் அனைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களை சென்றடையும் வகையில் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் மூலம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் பணிகளை செய்துவரும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், சர்வேயர்கள், வி.ஏ.ஓ.,க்கள், மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பிற அரசு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை சட்டத்திற்கு புறம்பாக அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தும், மிரட்டியும், அச்சுறுத்தியும், அவர்களை தாக்கியும், அவர்களது உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உடனடியாக எவ்வித தயக்கமும் இன்றி போலீஸ் மூலம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் நலனுக்காகவே அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்
என்பதை உணர்ந்து,
அரசுப்பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறை மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

