/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
13ல் நாமக்கல், 16ல் தி.கோட்டில் 'கல்லுாரி கனவு' வழிகாட்டி நிகழ்ச்சி
/
13ல் நாமக்கல், 16ல் தி.கோட்டில் 'கல்லுாரி கனவு' வழிகாட்டி நிகழ்ச்சி
13ல் நாமக்கல், 16ல் தி.கோட்டில் 'கல்லுாரி கனவு' வழிகாட்டி நிகழ்ச்சி
13ல் நாமக்கல், 16ல் தி.கோட்டில் 'கல்லுாரி கனவு' வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மே 07, 2025 02:05 AM
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தில், உயர்கல்வி வழிகாட்டி 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பிளஸ் 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்ததில், நாமக்கல் மாவட்டம், மூன்றாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில், உயர்கல்வியின் முக்கியத்துவம், உயர்கல்வி வாய்ப்புகள், போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசகர்கள் எடுத்துரைக்கின்றனர்.
நடப்பு, 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், நலப்பள்ளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் உள்பட சிறப்பு கவனம் தேவைப்படும் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து, நடப்பாண்டு, 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் கோட்டத்தில், வரும், 13, திருச்செங்கோடு கோட்டத்தில், வரும், 16ல், 'கல்லுாரி கனவு--2025' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.