/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவி பலாத்காரம் புகார் கல்லுாரி பேராசிரியர் கைது
/
மாணவி பலாத்காரம் புகார் கல்லுாரி பேராசிரியர் கைது
ADDED : செப் 23, 2024 02:27 AM
நாமக்கல்: நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் மதுரையை சேர்ந்த பிரதாப், 44. இவர் மனைவி, இரண்டு மகள்களுடன், நாமக்கல்லில் வசிக்கிறார்.
நாமக்கல்லைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், கல்லுாரியில் விலங்கியல் முதுகலை பட்டம் பெற்று வீட்டில் உள்ளார். இளங்கலை பட்டப்படிப்பு படித்தபோது, உதவி பேராசிரியர் பிரதாப்புடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி, உதவி பேராசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரித்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன், போக்சோ சட்டத்தில் பிரதாப்பை நேற்று கைது செய்தார்.